சிக்கலில் இருந்து விடுபடுவாரா கோத்தா!!

அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் 16ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மெனுவெல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணி அஷோக டி சில்வா, லசந்த விக்ரமதுங்கவின் மகள் தாக்கல் செய்த வழக்கினை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு தாக்கல் செய்த பெண் வெளிநாடு ஒன்றில் வாழ்கின்றார். இந்நிலையில் அமெரிக்கா இந்த வழக்குடன் ஒரு போதும் தொடர்புபடவில்லை. இதனால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க அதிகாரம் இல்லை என கோத்தபாய சார்பில் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்தவின் கொலை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது நடந்ததாகவும், அதற்கும் கோத்தபாயவுக்கும் தொடர்பு இல்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor