அரச ஊழியர் ஒருவரும் இராணுவ வீரரும் கைது!

இராணுவச் சிப்பாய் ஒருவரும் அரச ஊழியர் ஒருவரும் குருணாகலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor