மத்துகம பகுதியில் விபத்து – 08 பேர் காயம்

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 458 ஹொரணை , மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு அருகில் கிரிகெட்டிய பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் பயணித்த 8 பேர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், மத்துகம வேத்தேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய சுற்றுலா சென்ற சிலரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வேன் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், மத்துகம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்