பதில் பிரதமராக லக்ஸ்மன் கிரியெல்ல!!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளும் நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல செயற்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை அடுத்து, நாடாளுமன்றத்தில் ஐதேகவின் மூத்த தலைவராக லக்ஸ்மன் கிரியெல்லவே இருக்கிறார்.

இந்தநிலையிலேயே அவர் பதில் பிரதமராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் பட்டியலில், லக்ஸ்மன் கிரியெல்லவின் பெயரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor