காணாமல் போன் சிறுவர்கள் சடலமாக மீட்பு

பீதுறுதாலகால வனப்பகுதியில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹங்குராங்கெத்த பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றை சுற்றியுள்ள வனப்பகுதிக்கு சென்ற நிலையில் 15 வயது சிறுவர்கள் இருவர் நேற்று (01) காணாமல்போயிருந்தனர்.

இந்த நிலையில் மந்தாரம்நுவர பொலிஸார், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த தமது குடும்பத்தினருடன் குறித்த மலைக்கு சென்ற நிலையில் இரண்டு சிறுவர்களும் காணாமல் போயிருந்தனர்.

இரண்டு சிறுவர்களும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4 மணியளவில் அவர்களது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்