கடல்வளம் அழிவடைவதாக ஐ.நா எச்சரிக்கை

கரியமில பயன்பாடு காரணமாக கடல்வளம் அழிவடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரியமில பயன்பாடு காரணமாக கடல்வளம் அழிவடைந்து வருவதாகவும் இதன்காரணமாக புயல்கள் மற்றும் கடல் பேரழிவுகள் என்பன ஏற்படுதற்கான அதிகளவு வாய்ப்பு காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமை மற்றும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை என்பனவற்றினால் பலகோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலக இயற்கை எரிவாயு தரப்பிலான கரியமில வாயு வெளியீட்டில் 60 வீத பங்களிப்பு செய்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் வட துருவத்தின் மேற்பரப்பில் உள்ள 30 வீத உறைபனி உருகிவிடும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்