பலாலி விமான நிலைய குடிநீருக்கு 11 கோடி செலவு.

பலாலி விமான நிலையத்தின் அடிப்படை அபிவிருத்திப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளர் திருமதி. மல்காந்தி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பிராந்திய விமான நிலையத்திற்கு இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இந்த விமான நிலையத்தில் ஏற்படுத்துவதே நோக்கமாகும்.

விமான நிலையத்திற்கு தற்காலிக நீர் விநியோகத்திற்காக 11 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய அடிப்படை வசதிகளுக்காக சிவில் விமான சேவை அதிகாரசபையும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நிதி வழங்குகிறது.

பலாலி விமான நிலையம் நாட்டில் அமைக்கப்படும் நான்காவது விமான நிலையமாகும். இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்