இரு பிள்ளைகளின் தாயக் காணவில்லை!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற இளம் தாயொருவரை காணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா – காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்ற இளம் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கணவரின் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு செல்லுவதாக தெரிவித்து கடந்த 27ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது நண்பியுடன், மோட்டார் சைக்கிளில் வவுனியா பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த பெண் யாழ்ப்பாணம் செல்லாத நிலையில் அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவரை தேடும் முயற்சியில் பெண்ணின் உறவினர்கள் மேற்கொண்டிருந்த போதிலும் அது பயணளிக்கவில்லை. அதன் பின்னர் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் எதுவும் அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கிழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு குறித்த பெண்ணின் கணவர் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor