சம்பள பாக்கி: ‘மெர்சல்’ மேஜிக் கலைஞர் புகார் !

விஜய் நடித்த மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா தனக்கு சம்பளம் தரவில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிராக புகார் கூறினார்.

தற்போது பட நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக புதிய வீடியோ வெளியிட்டு கூறினார்.

முன்னணி கதாநாயகர்களைக் கொண்டு வெற்றிப் படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதில் பணியாற்றும் கலைஞர்களுக்கு முறைப்படி சம்பளம் வழங்குவதில்லை என்ற புகார்கள் அதிகரித்துவருகின்றன. 2.0 படத்துக்காக சப் டைட்டில் எழுதிய ரேக்ஸ் புகார் அளித்துள்ள நிலையில் மெர்சல் படத்திற்காக ராமன் ஷர்மா புகார் அளித்துள்ளார்.

மூன்று விதமான கதாபாத்திரத்தில் ஒரு கதாபாத்திரம் மேஜிக் கலைஞராக வலம் வரும். அந்த கதாபாத்திரத்திற்காக ராமன் ஷர்மா மேஜிக் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தார். ஆனால் அவருக்கு பேசிய படி சம்பளம் தரவில்லை என்று ஏற்கெனவே கூறினார்.

தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஏப்ரம் மாதம் கனடாவிலிருந்து சென்னை வந்து இங்கு ஒரு வழக்கறிஞர் மூலம் பட நிறுவத்துக்கு எதிராக புகார் அளித்திருப்பதாக கூறினார். மேலும் வழக்கு செலவு உட்பட 4 லட்சம் ரூபாய் கேட்டதாக தெரிவித்தார்.

பிகில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் அட்லீ, விஜய் ஆகியோரை சந்தித்து பேசியதாகவும் ஆனால் இது குறித்து அவர்களிடம் ஏதும் பேசவில்லை என்றும் கூறினார்.

படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த வேறு பல கலைஞர்கள் மெர்சல் படத்திலும் பணியாற்றியிருந்தனர். அவர்களுக்கும் முறைப்படி சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று ராமன் ஷர்மா  கூறினார்.


Recommended For You

About the Author: Editor