கடன்களை மீள செலுத்துவதற்கான காலம் வந்துள்ளது- ரணில்!!

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு கடந்த மூன்று வருடங்களில் பெற்ற கடன்களை அடுத்துவரும் ஐந்து வருடங்களில் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவே தனது அரசாங்கம் அடுத்து வரும் ஐந்து வருடங்களில் முகம்கொடுக்கவுள்ள பாரிய சவால் எனவும் அவர் கூறினார்.

சீ.நாராயணசாமி எழுதிய மெனஜிங்க் டிவலோப்மண்ட – மக்கள் பொலிடிக்ஸ் எண்ட் இன்ஸ்டிரக்சன்ஸ் (Managing Development – People, Politics and Institutions) என்ற புத்தக வெளியீட்டு விழாவிலேயே பிரதமர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், பொருளாதாரத்தை ஸ்திரமான இடத்திற்கு கொண்டுவர மூன்று வருடங்கள் தேவைப்பட்டன. கடன்களை பெற்றுதான் இதனை செய்தோம். இப்போது கடன்களை மீள செலுத்துவதற்கான காலம் வந்துள்ளது.

எனவே எப்படியாவது பணத்தை தேடி அந்த கடன்களை செலுத்த வேண்டும். அடுத்த ஐந்து வருடங்களில் எமக்குள்ள சவாலான காரியம் அதுவாகும்.

அபிவிருத்திகள் நடைபெறும் விதம், பொது மக்கள் நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்யும் திறன் ஆகியவை நாம் பெற்றுக்கொள்ளும் பலன்களிலேயே தங்கியுள்ளது.

அதேபோல் மக்கள் சேவையை சகதிமயபடுத்தவும் அவசியமாகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor