பல ஆண்டுகள் கழித்து உரிய முகவரிக்கு வந்த தபால் அட்டை!!

பிரான்ஸ் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட தபால் அட்டை ஒன்று தற்போது சரியான விலாசத்திற்கு வந்தடைந்த சம்பவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வியக்ஸ் பவுக்காவ் என்ற நகரில் வசிக்கும் குயிட்டரி டாரியோ என்ற பெண் தனது வீட்டில் இருக்கும் தபால் பெட்டியை திறந்துள்ளார். அதில் புதியதாக தபால் ஓன்று வந்திருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். தபாலில் விவரத்தை பார்த்த அவருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது.

அந்த தபால் நான்ஸி என்னும் நகரில் இருந்து 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட அந்த தபால் தற்போது கிடைத்துள்ளதை நினைத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 26 ஆண்டுகள் ஆகியும் அந்த தபால் அட்டை கிழியவோ அல்லது பழையதாகவோ ஆகாமல் பார்ப்பதற்கு புதிதாகவே இருந்துள்ளது. வீட்டின் முகவரி மாறி இருந்ததால் ஏற்பட்ட குழப்பமே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor