இலங்கையில் புதிய வாகனவரி அறிமுகம்!

இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம் என்றால் இந்த வரி அமுலாகும்.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அல்லது இலங்கையில் பொருத்தப்படும் அனைத்து வாகனங்களும் பாரியளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய என்ஜின் திறன் 2300க்கு அதிகமான டீசல் வாகனங்கள், 1800க்கும் அதிகமான பெட்ரோல் வாகனம் மற்றும் 200 கிலோவேட் மின்சார திறன் கொண்ட வாகனங்களுக்காக இந்த வரி அறவிடப்படவுள்ளது.

எனினும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த வருடம் ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய இந்த வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் குறித்த வரி விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வான், சிங்னல் கெப், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, அம்பியுலன்ஸ், லொறி, ட்ரெக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி விதிக்கப்படவிலலை.

எப்படியிருப்பினும் வரி திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் சாதாரண பொது மக்கள் வாகனம் கொள்வனவு செய்வதற்கு தொடர்ந்து கனவாகி விடும் என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor