தமிழ் கலைஞர்களுக்காகன சரித்திர பாராட்டுவிழா!!

இலங்கை வரலாற்றில் தமிழ்க் கலைஞர்களுக்காக முதன்முறையாக வரலாற்று பாதையில் தடம்பதிக்கும் சரித்திர பாராட்டு விழா இடம்பெறவுள்ளது.

இந்த விழா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் தாமரைத் தடாகம் அரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

கலை உணர்வும் தமிழ்க் கலைஞர்கள் மீது அமைச்சர் மனோ கொண்ட அளப்பெரிய பற்றே இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய காரணமாகும்.

இந்த நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான பல்வேறு துறைசார்ந்த தமிழ் கலைஞர்கள் பங்குபற்றவுள்ளதுடன், விருது வழங்கி கௌரவிக்கப்படவும் உள்ளனர்.

இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுவதுடன், இவ்விசேட நிகழ்வுக்காக கருப்பாடல் (Theme Song) உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 30 பாடகர்கள் பாடியதுடன் இப்பாடலுக்கு பிரபல இசையமைப்பாளரும் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளருமான சுருதி பிரபா இசையமைத்துள்ளார்.

மறைந்த இலங்கை தமிழ்கலைஞர்கள் இந்நிகழ்வில் நினைவு கூறப்படும் அவ்வேளையில் சிறப்பு விருதுகளும் வழங்கிவைக்கபடவுள்ளன. விசேடமாக ஈழத்து சினிமாவிற்கு பங்களித்த மறைந்த மற்றும் வாழும் தமிழ் கலைஞர்களின் திரைத்துணுக்குகள் அவர்களின் ஞாபக ஒளிப்படங்களும் மிகச்சிரமத்தின் மத்தியில் பெறப்பட்டு காண்பிக்கப்படவுள்ளன.

இனக் கலவரத்தின்போது அழிந்துபோன பல இலங்கைச் சினிமா பதிவுகளும் வரலாற்றுப் பதிவாக காண்பிக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: Editor