பருத்தித்துறையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!!

பருத்தித்துறை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின்போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு, மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான தேடுதல் நடவடிக்கையில், யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor