அமெரிக்காவின் உதவியை நாடியது பிரேசில்!!

அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக ஜி-7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை நிராகரித்த பிரேசில் தற்போது அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.

அமேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், இந்த அமேசன் காடு கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

இந்நிலையில், அமேசன் காடுகளில் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க ஜி-7 நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது பிரேசில். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, அவரது மகன் எட்வர்டோ போல்சனாரோ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை வாஷிங்டன் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மகன் எட்வர்டோ போல்சனாரோ மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர்.

இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எட்வர்டோ போல்சனாரோ, பிரேசிலுக்குத்  திரும்பியதும் தனது தந்தையுடன் கலந்தாலோசித்து பின்னர் ஒரு அறிவிப்புக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமேசன் காட்டுத்தீயை அணைக்க பிரேசில் அரசின் முயற்சி சிறப்பாக இருந்ததாக ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டிய போல்சனாரோ, அமெரிக்க அரசின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor