
வவுனியா மாவட்டத்தில் உள்ள பொலிஸ்நிலையங்களில் பணிபுரியும் பொலிஸாருக்கான அரையாண்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இன்று காலை சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது பொலிஸ் நிலையங்கள், பொலிஸாரின் உடைகள், மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸாரின் வாகனங்கள் என்பன சோதிக்கப்பட்டன.
அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றுள்ளது.
இதில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாதசில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட வவுனியா பிராந்தியத்தில் இருக்கின்ற பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.