எபோலா வைரஸ் தாக்கத்தால் 2000 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிவே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 3,004 பேருக்கு எபோலா நோய் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 2,006 பேர் உயரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் மூலம் பரவும் எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழப்பதற்கான அபாயம் 25 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் கொங்கோவை தாக்கி பெரும் உயிர் சேத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் கொங்கோவில் நீடித்து வருகிறது.

எபோலா வைரஸ் பொதுவாக விலங்குகள் மற்றும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவை உள்ளன. நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் வாந்தியில் இரத்த கசிவு ஏற்படும்.

கொங்கோ அரசு தடுப்பூசிகள் மூலம் சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவவலை தடுத்துள்ளது. தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் எபாலோ வைரஸ் காய்ச்சலுக்கு 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5,420 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலவனத்தைச் சார்ந்துள்ள வெப்ப மண்டலப் பகுதியில் பொதுவாக இந்நோய் திடீர்ப்பரவலாக ஏற்படுகிறது. 1976ல் இருந்து 2013 வரை ஆயிரத்துக்கும் குறைவானவர்களே ஒவ்வொரு ஆண்டும் பாதிப்படைந்தார்கள். சூடான் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில்தான் முதன் முறையாக எபோலா வைரஸ் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்