மகாராஸ்டிராவில் தீ விபத்து – 08 பேர் பலி

மஹராஸ்டிராவின் துலே பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தொழிற்சாலையில் 100இற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்களில் 8 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 15இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்