ஜக்­குலினின் பாடலை 3 கோடி பேர் பார்த்துள்ளனர்.

சாஹோ எனும் திரைப்­ப­டத்தில் நடிகர் பிர­பா­ஸுடன் நடிகை ஜக்­குலின் பெர்­னாண்டஸ் இணைந்து ஆடிய பேட்போய் பாடல் வீடியோ, யூரி­யூப்பில் 10 நாட்­க­ளுக்குள் சுமார் 3 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளன.

சுஜீத் இப்­ப­டத்தை இயக்­கி­யுள்ளார். இப்­படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழி­களில் இன்று வெள்ளிக்­கி­ழமை வெளியா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

பிரபாஸ் கதா­நா­ய­க­னாக நடிக்கும் இப்­ப­டத்தில் ஷ்ராதா கபூர் கதா­நா­ய­கி­யாக நடிக்­கிறார். இப்­ப­டத்தின் பாடல் ஒன்றில் ஜக்­குலின் பெர்­னாண்டஸ் நட­ன­மா­டி­யுள்ளார்.

பேட்போய் எனும் இப்­பாடல் யூ ரியூப்பில் கடந்த 19 ஆம் திகதி வெளியி­டப்­பட்­டது.

நேற்று மாலை­வரை 2 கோடியே 92 லட்­சத்­துக்கு அதி­க­மான தட­வைகள் இவ்­வீ­டி­யோவை பார்­வை­யிட்­டி­ருந்­தது.

இப்­பா­ட­லுக்கு பாட்ஷா இசை­ய­மைத்­துள்ளார்.

ஏனைய 3 பாடல்­க­ளுக்கு தனிஷ்க் பக்சி, குரு ரந்­தவா, ஷங்கர் இஷான் ஆகியோர் இசை­ய­மைத்­துள்­ளனர்.

ஜிப்ரான் பின்­னணி இசை­ய­மைத்­துள்ள இப்­ப­டத்தின் பாடல்­க­ளுக்கு பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்