அறுகம்பை கடலில் அலை சறுக்கல் விளையாட்டு

செப்­டெம்பர் 25ஆம் திக­தி­முதல் 29ஆம் திக­தி­வரை ஐந்து தினங்கள் நீடிக்கும் சோ ஸ்ரீ லங்கா ப்ரோ மென்ஸ் கியூ எஸ் 3,000 அலைச் சறுக்கல் போட்­டியில் பெரு­ம­ள­வி­லான வெளி­நாட்டுப் போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அறு­கம்பை கடல்­ப­கு­தி­யா­னது அலைச் சறுக்கல் போட்­டி­களில் பங்­கு பற்­று­வோரை மட்­டு­மல்­லாமல் அவற்றை கண்­டு­க­ளிப்­போ­ரையும் பர­ப­ரப்பில் ஆழ்த்­து­கின்­றது. ‘‘இலங்கை ஓர் அழ­கிய நாடு மட்­டு­மல்ல. அலைச் சறுக்­க­லுக்கும் பெயர்­பெற்­ற­தாகும்.

அறு­கம்பை கடற்­ப­கு­தியில் சீறிப்­பாயும் அலை­க­ளுக்கு மத்­தியில் அலைச் சறுக்­கலில் ஈடு­ப­டுவோர் பார்­வை­யா­ளர்­களைப் பிர­மிக்கச் செய்­கின்­றனர். உலகத் தரம்­வாய்ந்த போட்­டி­யா­ளர்கள் சோ ஸ்ரீலங்கா ப்ரோ மென்ஸ் கியூ எஸ் 3,000 நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­று­வதால் இப் போட்டி பர­ப­ரப்பைத் தோற்­று­விக்கும்’’ என உலக சேர்வ் லீக் ஆசிய நிகழ்ச்சிப் பணிப்­பாளர் ஸ்டீவ் ரொபர்ட்சன் தெரி­வித்­துள்ளார்.

உலக சேர்வ் லீக்­குடன் இணைந்து ஸ்ரீ லங்கன் சேர்வ் சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­துள்ள இப் போட்­டியில் உள்ளூர் அலைச் சறுக்கல் வீரர்­க­ளான டி. ஏ. ல­க்ஷித்த, ப்ரனீத் சந்­த­ருவன், லெசித்த ப்ரபாத் உட்­பட இன்னும் பலர் பங்­கு­பற்­ற­வுள்­ளமை சிறப்­பம்­ச­மாகும்.

சர்­வ­தேச சேர்வ் சங்க உலக விளை­யாட்டு விழா மற்றும் டோக்­கியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா ஆகி­ய­வற்­றுக்­கான தகு­திகாண் சுற்­றா­கவும் அறு­கம்பே அலைச் சறுக்கல் போட்டி அமைவதால் அலைச் சறுக்கல் போட்டியாளர்கள் அனைவரும் தத்தமது அதீத ஆற்றல்களை வெளிப்படுத்த முயற்சிப்பர் என நம்பப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்