பிக்பொஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறினார்

வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக பிக்பொஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே காதல் என பல விமர்சனங்களை சந்தித்து வந்த கவின் ஒரு முறை தனது குடும்ப கஷ்டத்தின் காரணமாகவே பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கவினின் குடும்பத்தினர் அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் சீட்டு கம்பனியொன்றை நடத்தி வந்துள்ளதாகவும், அதன் மூலம் அவர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கவின் தாயர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கவினின் தயாருக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. குறித்த தகவல் கவினிற்கு வழங்கப்பட்டவுடன் அவர் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு சீசன்களிலும் காணாத சர்ச்சைகளை பிக்பொஸ் நிகழ்ச்சி இம்முறை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்