மட்டக்களப்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மட்டக்களப்பு- கல்வியங்காடு இந்து மயானத்தில், தற்கொலைக் குண்டுத்தாரியின் உடல் எச்சங்கள் புதைக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

குண்டுத்தாரியின் உடலை, குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுமெனவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஓர் இனத்தினரதும் மதத்தினரதும் மனங்களை காயம்படுத்தும் விதமாக மட்டக்களப்பு- கல்வியங்காடு இந்து மயானத்தில் பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்டமையை ஏற்க முடியாதெனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் சீயோன் தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக புதைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த செயற்பாடுக்கு எதிராக கடந்த 27ஆம் திகதி இரவு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்