
திருக்குறளையும், திருவள்ளுவரையும் கௌரவிக்கும் முகமாக வடமாகாண ஆளுநாின் ஒழுங்கமைப்பில் திருவள்ளுவா் தபால் உறை மற்றும் திருவள்ளுவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை ஆகியன வெளியிடப்பட்டிருக்கின்றது.
வடமாகாண ஆளுநாின் ஒழுங்மைப்பில் திருவள்ளுவா் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுட்டிக்கப்பட்டு விசேட நிகழ்வு களும் நடாத்தப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக நேற்றைய தினம் ஜனாதிபதியினால் திருவள்ளுவாின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் உறை மற்றும் முத்திரை ஆகிய வெளியிடப்பட்டுள்ளது.