பிள்ளையாரை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் படையெடுப்பு!

முல்லைத்தீவு -பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக, வெலிஓயா பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் முன்னர், குருகந்த ரஜமஹா விகாரை இருந்தது எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டு பண்ணுவதாகவும் இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதில் கவனம் செலுத்தி தமது பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை புல்மோட்டை பகுதியிலிருந்து சென்ற பௌத்த பிக்குகள் தலைமை தாங்கி நடத்தியிருந்தனர்.

குறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது, இந்த நிலையில் மீண்டும் இன்று பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor