பள்ளி செல்லவுள் பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு!!

பிரித்தானிய அரச குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட் பாடசாலை செல்லவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கென்சிங்டன் அரண்மனை இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

நான்கு வயதான இளவரசி சார்லட் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ் மருத்துவமனையில் 2015ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி இளவரசி சார்லட் பிறந்தார்.

நான்கு வயதான இவரது முழுப்பெயர் சார்லட் எலிஸபெத் டயானா. சார்லட்டுக்கு ஒரு அண்ணனும், தம்பியும் உள்ளனர்.

இனிமேல் இளவரசி சார்லட் அண்ணனுடன் பாடசாலைக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor