மகாராணி பார்லிமெண்டை தடைசெய்ய காரணம் தெரியுமா?

பிரித்தானியா பிரதமர் பொறிஸ் ஜோன்சன், அதிரடியாக மகாராணியாரிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

அது என்னவென்றால், பிரித்தானிய பாராளுமன்றம் கூடுவதை, மகாராணி தனக்கு உள்ள விசேட அதிகாரத்தை பயன்படுத்தி தடை செய்துள்ளார்.

அக்டோபர் 14ம் திகதிவரை பாராளுமன்றம் கூடுவது சற்று முன் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதற்கான, முழு ஏற்பாடுகளையும் பாராளுமன்ற இடையூறு எதுவும் இன்றி, செய்து முடிக்க பொறிஸ் ஜோன்சன் திட்டம் தீடியுள்ளார்.

இது இப்படி இருக்க, 31ம் திகதி அக்டோபர் மாதம் என்ன நடந்தாலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தே தீரும் என்று திட்டவட்டமாக பொறிஸ் அறிவித்துள்ளார். டீல் அல்லது நோ டீல் என்ற வகையில் பிரிட்டன் பிரியவுள்ளதாம்.

பிரிட்டன் போடும் டீலை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும் பிரிட்டன் பிரியும்.

அப்படி பிரிந்தால், இனி ஐரோப்பிய நாடுகள் செல்ல விசா தேவை. பல மில்லியன் ஐரோப்பியர்கள் பிரிட்டனை விட்டு உடனே தமது சொந்த நாடுகளுக்கு செல்ல நேரிடும். இச்செய்தி தற்போது பரவ ஆரம்பித்ததில் இருந்து. சடுதியாக பிரிட்டனில் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளது.

அதுபோக பல வேலையில்லா திண்டாட்டங்களும் வரலாம் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. மேலும் பாலின் விலை கொண்டு ஏனைய இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor