வௌிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரான்ஸ் உட்பட 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா அனுமதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்கு இலங்கையில் தங்கியிருக்க கட்டணம் இன்றிய விசா அனுமதிகளை வழங்கும் வேலைத்திட்டம் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்ததது.

கட்டணம் இன்றி வழங்கப்படும் விசா அனுமதியில் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு மாதத்தின் பின்னர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது தொடர்ந்தும் தங்கியிருக்க கட்டணம் செலுத்தி விசா அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் கட்டணம் இன்றி விசா வழங்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor