திருவிழாவில் நடந்த திருட்டுப் பயங்கரம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் 20 பேரிடம் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 45 பவுண் தங்க நகைகள் நேற்றைய தினம் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட நகைகளில் தாலிக்கொடி மூன்றும் 17 சங்கிலிகளும், தொலைப்பேசி உள்ளிட்ட உடமைகளும் திருடப்பட்டுள்ளதாவௌம் , பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களிடம் வெளிவீதியில் வைத்து இந்தத் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், நகைகளைப் பறிகொடுத்த சிலர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யாது சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை நல்லூர் ஆலய வெளி வீதியில் 60 சி சி ரி வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் 600 பொலிஸாருக்கு மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor