இலங்கையில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள்!!

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆறு பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத் தளபதியின் பரந்துரைகளுக்கமை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வை வழங்கியுள்ளார்.

பிரிகேடியர் டிஆர் தர்மசிறி, பிரிகேடியர் ஜேஎம்யுடி ஜயசிங்க, பிரிகேடியர் சிகே ஹந்துன்முல்ல, பிரிகேடியர் ஏடி எல்வத்த, பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஆகியோர், 2019 ஜூலை 30 ஆம் நாளில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரிகேடியர் ஏஐ மாரசிங்க, 2019 ஓகஸ்ட் 15ஆம் நாளில் இருந்து தற்காலிக மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பதவி உயர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் உள்ளடங்கியுள்ளார்


Recommended For You

About the Author: Editor