அமெரிக்காவில் நிலநடுக்கம்.

அமெரிக்காவின் ஒரிகன் மகாணத்தின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பாண்டன் நகரிலிருந்து 150 மைல் தொலைவிலும், பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

மேலும், நிலநடுக்கத்தால் எந்த வித உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்