தங்கத்தின் விலை அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 400 ரூபாவால் உயர்வடைந்து 74 ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டது.

இதன்படி ஆபரணத் தங்கமான 22 கரட் ஒரு பவுண் (8 கிராம்) 67 ஆயிரத்து 850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 30 நாள்களில் தூய தங்கத்தின் விலை பவுனுக்கு 6 ஆயிரத்து 800 ரூபா அதிகரித்துள்ளது. ரூபா மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்