நெருக்கடிகளை சமாளிக்க ஹுவாவே தயாராகவுள்ளது: தலைமை செயல் அதிகாரி

ஹுவாவே (Huawei) நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கியுள்ள 90 நாள் தற்காலிக உரிமம் என்பது சிறு பயனையே கொண்டுள்ளது. இருப்பினும், ஹுவாவே எதற்கும் தயார் நிலையில் உள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரென் செங்ஃபேய் (Ren Zhengfei) சீன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து உட்பொருள் கட்டுப்பாட்டை ஓராண்டுக்கு முன்பு நாங்கள் பெற்றோம். ஹுவாவே 5G தொழில்நுட்பத்தின் செயற்திறன் மீது நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாவேயின் 5G-யைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனங்களாலும் ஹுவாவேயின் 5G தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்று ஊகிக்கிறேன்

என ரென் செங்ஃபே கூறியுள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்பத்தின் அகலத்தையும் ஆழத்தையும் கற்க வேண்டும். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பெரிய இடைவெளி நிலவிய போதிலும், 5G தொழில்நுட்பத்துறையில் ஹுவாவே முன்னணி வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ரென் செங்ஃபே குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே வர்த்தகப் போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து, இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சீனாவின் புகழ்பெற்ற ஹூவாவே நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில்அமெரிக்கா இணைத்தது. இதனையடுத்து, கூகுள் நிறுவனம் ஹூவாவே ஸ்மார்ட்போனுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

மேலும் கூகுள் ப்ளே வசதி, பாதுகாப்பு செயலி என அனைத்தையும் திரும்பப்பெறுவதாகக் கூறியது. இந்த திடீர் அறிவிப்பால், ஹூவாவே பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்நிலையில், 90 நாட்களுக்கு இந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Webadmin