தகவல்களை பரிமாறிக்கொள்வது அவசியம் – சவேந்திர சில்வா

ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக்கொள்வது அவசியமாகும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 இன்று(வியாழக்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சமகால பாதுகாப்பு கள நிலவரங்களில் இராணுவத்தின் சிறப்பு எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.

குறித்த மாநாட்டில் 40 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரிதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய நவீன தகவல் யுகத்தில் இராணுவத்தின் வெற்றி என்பது யாரிடம் சிறந்த தகவல்கள் உள்ளன. அதனை யார் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor