நல்லூர் வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமரா!!

யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிட தடை எனவும் அவ்வாறு பறக்க விடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் யாழ். மாகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் குறித்த வளாகத்தில் தடை செய்யப்பட்ட ட்ரோன் கமறா பறக்கவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயம், யாழ். மாநர முதல்வர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்த ஆலய பரிபாலன சபையினர், இச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த செயற்பாடு நிறுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து குறித்த ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்க விடுதல் என்பன நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor