
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சுமார் 150 கிலோகிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே குறித்த தொகுதி போதைப்பொருள் (புதன்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்