சுற்றுலா வாகனம் விபத்து!!

மொனராகலை – மரகல மலைக் காட்டிலிருந்து நெரம்பிமவுக்கு, சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor