நீதி வேண்டி பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்போராட்டம்!📷

ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் பாரிசிலிருந்து இன்று 28.08.2019 புதன்கிழமை 11.00 மணிக்கு பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நிழற்படக்கண்காட்சியும், தொடர்ந்து 14.00 மணிக்கு நடைபயணப்போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டு 15.09.2019 வரை தொடர்ந்து ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்விலும் தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும்!

எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் விடுதலைபெற்று நிம்மதியாக எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம் இந்த நடை பயணம் உலகின் மனசாட்சியை எழுப்பி தமிழினத்தின் உள்ளங்களிலும் எழுச்சியூட்டட்டும்!….


Recommended For You

About the Author: Editor