யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா மற்றும் விமான டிக்கெட் என்பனவற்றை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவு செல்வதாக கூறிய இந்த இளைஞன் டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. அவர் நேற்று காலை 10 மணிக்கு எம்ரேட்ஸ் ஈ.கே – 650 ரக விமானத்தில் டுபாய் சென்று, அங்கிருந்து பிரான்ஸ் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும் நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தி அவரது ஆவணங்கள் சோதனைக்கு இடப்பட்டுள்ளது. இதன்போது பாரிய மோசடி அம்பலமாகி உள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச இளைஞனின் பிரான்ஸ் ஊடாக ஸ்பெயின் செல்வதற்கான சட்டரீதியான விசா தகவலைகளை மறைத்து இந்த இளைஞனின் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இளைஞன் முதலில் மாலைதீவிற்கு செல்வதாக விமான நிலையத்தின் உள்ளே சற்று தூரம் சென்று பிரான்ஸ் செல்லும் எமிரேட்ஸ் விமானத்திற்கு செல்ல முயற்சித்துள்ளார். அதன் போது அவர் சிக்கியுள்ளார்


Recommended For You

About the Author: Editor