ரத்தின தேரருக்கு நெருக்கடி!

கண்டி தலதா மாளிகை முன்றலில் நான்கு நாள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அணுகி வாக்குமூலம் பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மேற்படி திணைக்களம் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் மேற்படி குற்றச் சாட்டுக்களை சுமத்தியவர்களில் ரத்தின தேரர் முதன்மையானவராக விளங்கிவருகிறார். இதனடிப்படையிலேயே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இன்று முற்பகல் அத்துரலியே ரத்ன தேரர் கண்டி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும்போது தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாக அத்துரலிய ரத்தினதேரர் பகிரங்கமாக சவால் விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Recommended For You

About the Author: Editor