தீயிட்ட தீயவனே திரும்பிப் பார் !!📷

தென்னமெரிக்காவின் அமேசன் காடுகள் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக எரிந்து கொண்டிருக்கின்றன. .தீயூட்டப்பட்டதற்கான காரணமாக தீய அரசியல் இருப்பதாக கருதப்படுகிறது. அமேசன் காடுகளில் 60 சதவீதத்தைக் கொண்டுள்ள பிறேசில் நாட்டுக்கான காட்டுப் பகுதியிலேயே இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

விவசாயம் ,கைத்தொழில் என்ற பெயரில் பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றன. புவிக் கோளத்தில் வாழும் உயிர்களுக்குத் தேவையான ஒட்சி சனில் 20 சதவீதமானவற்றை இந்த அமேசன் காடுகளே வழங்கி வருகின்றன. மேலும் புவியில் மனித செயற்பாட்டால் வெளியிடப்படும் நச்சு வாயுக்களின் பெரும் பகுதியை இந்த அமேசன் காடுகளே உள்வாங்கிக் கொள்கின்றன. இவ்வாறு பூமியின் நுரையீரல் போலச் செயற்படும் இக்காடுகளில்
16000 வகையான மரங்கள்
40000.     ,,             தாவரங்கள்.
1300          ,,           பறவையினங்கள்.
430             ,,           நீர், நில வாழ்வன
380             ,,        ஊர்வன
3000            ,,     மீன் இனங்கள் .
மற்றும் 25 இலட்சம் வகையான பூச்சியினங்கள் வாழ்வதாகவும் கருதப்படுகிறது .இவ்வாறு சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த இக்காடானது தீயினால் அழிக்கப்படுவது புவியின் உயிரியல் வாழ்வுக்கான அச்சுறுத்தலாகும்.
மரங்களை வளர்ப்போம்
புவியைப் பாதுகாப்போம்

28. 08 .2019

 

 

 

 

 


Recommended For You

About the Author: Editor