நிதி மோசடி தொடர்பில் ரணிலின் அதிரடி

மத்திய கலாசார நிலையத்தில் இருந்து 1.2 பில்லியன் ரூபா காணாமல் போயுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழு ஒன்றை நியமித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையிலான குழுவை விசாரணைகளுக்கு நியமித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாயக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் இது குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதமருக்கு விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய கலாசார நிலையமானது, அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கீழ் உள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

எனினும், அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை, அமைச்சர் ரவி கருணாநாயக்க விரும்பவில்லை. இதனை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மத்திய கலாசார நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor