அக்கரைப்பற்று மேயருக்கு பகிரங்க வேண்டுகோள்!!

அக்கரைப்பற்று மாநகர சபையின் கடற்கரை வீதி எல்லையில் வீதி அமைக்குமாறு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லையான அக்கரைப்பற்று- வடிச்சலடி பகுதியான மடுவத்தடி கடற்கரை வீதியானது கடந்த காலங்களில் கொங்றீட் வீதியும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லையான இப்பகுதியில் நாளாந்தம் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வீட்டு சமயலறைக் கழிவுகள், கோழிப்பண்ணைக் கழிவுகள், மாட்டுக் கழிவுகள், கோழி அறுத்த கழிவுகள் மற்றும் சகல குப்பைகளும் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டன.

அதனால் அவ்விடத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும், நாய்த் தொல்லைகளும் அதிகரித்து விட்டன. இவ்விடங்களை அக்கரைப்பற்றுப் பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர்கள் ஒரு நாளாவது பார்வையிட்டதில்லை.

அக்கரைப்பற்றின் அழகான கடற்கரைப் பகுதி துர்நாற்றம் வீசும் பகுதியாகவும், கட்டாக்காலி நாய்களின் பகுதியாகவும் மாறி வருவதை அக்கரைப்பற்று மக்களும், உள்ளுர் அரசியல் வாதிகளும் இன்னும் இதை கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

அதிலும் விசேடமாக இந்த இடத்தில் அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கிழக்கு வாசல் என்னும் அழகான பீச் கவுஸ் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ளது.

அதிலும் அதி விசேடமாக அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் புதல்வர் ஸக்கி அதாவுல்லா இருந்து வருகின்றார். கடந்த 21 ஆண்டுகளாக அக்கரைப்பற்றுப் பகுதிகள் அதாவுல்லாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

இப்போதும் கூட. ஆனால் அதாவுல்லாவும் புதல்வரும் இன்னும் அக்கரைப்பற்று எல்லை முடிவு மடுவத்தடி கடற்கரைவீதியைக் கண்டு கொள்ளாமல் உள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

இந்த வீதியின் முடிவில் அடுத்த பகுதியான அட்டாளைச்சேனை எல்லையான சுமார்-90 அடி நீளம் தூரம் கொண்ட வீதி அமைக்கப்படாமல் இன்னும் பள்ளம் படுகுழியாகவும் மழைபெய்தால் நீர் நிறைந்தும் காணப்படுகின்றது. அவ்விடம் டெங்கு கிடங்காகவும் மாறிவிட்டது.

மழை காலங்களில் மேற்படிவீதியில் பொது மக்கள் பயணிக்க முடியாமல் மாற்றுப் பாதைகள் மூலமாக பெருமளவு சுற்றிப்பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு செக்கனில் கடக்கவேண்டிய தூரத்தை சுமார் 25 நிமிட நேரம் சுற்றி பயணிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் அவ்விடத்தில் எந்தக் காலத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்விடத்தில் பாரியளவு டெங்கு உற்பத்தியாகி வருகின்றது.

மேற்படி வீதியானது அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை எல்லையானது சுமார் 80 அடிநீளம் கொண்டது.இவ்விடத்தில் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியாகும்.

சுமார் 80 அடி தூரம்உள்ளது. மேற்படி 90 அடி நீளமானது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாகும். இத் தூரத்தைக் அட்டாளைச்சேனை பிரதேச சபையால் செப்பனிட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

மேற்படி 90 அடிநீளம் தூரம் கொண்ட இவ்வீதியை அமைக்கும் போது நீர் வடிந்தோடக் கூடியவாறு 2 குளாய்கள் வைத்து வீதி செப்பனிடப்பட வேண்டும்.

எனவே 90 அடிநீளம் அடி தூரம் கொண்டமேற்படிவீதியை செப்பனிட்டு குளாயும் பொருத்தி பொதுமக்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாகவும் தற்போதைய பள்ளங்களை மூடி செப்பனிடுவதன் மூலமாக தற்போது பெருகிவரும் டெங்கு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் வசதியாக இருக்கும்.

அக்கரைப்பற்று- வடிச்சலடி வீதி அமைக்கப்படுமானால் தற்போது பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்கவும், வாகன விபத்துக்களை தடுக்கவும் வசதியாக இருக்கும். அக்கரைப்பற்று மாநகர மேயரே அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு.


Recommended For You

About the Author: Editor