சிவரூபனுடன் தொடர்பை பேணிய இருவர் கைது

பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபனுடன் தொடர்புகளை வைத்திருந்த இருவர் பளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அண்மையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஏ.கே.47 ரக தூப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து போன்றவை கரந்தனில் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டிருந்த, நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆழியவளை பகுதியில் இருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்