வியாழேந்திரன் உட்பட ஐவருக்கு அழைப்பாணை

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இவ் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நேற்றுமுன்தினம் இரவு பொலிசார் இரகசியமாக புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்துகுமுன் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்காரர்கள் மட்டக்களப்பு  கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையிலேயே வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.


Recommended For You

About the Author: Ananya