சப்பரம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ சப்பரதம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாலை 6 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான  குதிரையாட்டம் ,  கரகாட்டம் , தீபந்த விளையாட்டுக்கள் , வெளிவீதியில் இடம்பெற , வேல்பெருமான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெளிவீதிலா வந்தார்.
இன்றைய சப்பர திருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்