ஹொங் கொங்கில் மிக மோசமான நெருக்கடி– சீன இராஜதந்திரி!!

ஹொங் கொங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது என சீன மூத்த இராஜதந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த எதிர்ப்பு போராட்டங்களால் ஏற்படும் நெருக்கடியை எதிர்கொள்ள ஹொங் கொங் அரசாங்கத்திற்கு வணிகக் குழுக்கள் கூடுதல் ஆதரவினை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், நகரத்தின் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்க உதவுவதுடன், வணிகக் குழுக்களும் சாதகமான பங்கை வகிக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த மூன்று மாதங்களாக ஹொங் கொங் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சில நேரங்களில் போராட்டங்கள் வன்முறைகளாகவும் மாறி வருகின்றன.

இப்போது இடைநிறுத்தப்பட்ட ஒப்படைப்பு சட்டமூலத்தினால் கவலை கொண்டுள்ள சீன அரசாங்கம், இதனால் தூண்டப்பட்ட வன்முறைமற்றும் போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றது.

அதிகரித்து வரும் வன்முறையைத் தடுக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்று ஹொங் கொங் தலைவர் கேரி லாம் எச்சரித்தமையைத் தொடர்ந்தும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கடந்த வார இறுதியில் நீர்த்தரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor