ஜனாதிபதி -கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில்!!

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பின் போது முக்கியமான விடயங்கள் எவையும் பேசப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தபோதும், 11.20 அளவிலேயே ஆரம்பமாகியிருந்தது.

குறித்த கூட்டத்தில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆதவன் தெரிவித்தார்.

அத்துடன், கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஈ.சரவணபவன், சிறிநேசன் ஆகியோரே கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முக்கியத்துவம் வாய்ந்த எந்வொரு விடயம் குறித்தும் பேசப்படவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரை மணித்தியாலத்தின் பின்னர் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இதன்காரணமாக இன்றைய குறித்த கூட்டம் எந்தவொரு விடயங்களும் பேசப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றைய கூட்டத்தினை புறக்கணித்திருந்தமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சு, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், வடக்கு ஆளுனர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor