ஒஸ்திரியாவுக்கான இலங்கை தூதுவர் விசேட சந்திப்பு!

அணுசோதனை தடை ஒப்பந்த அமைப்புடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஒஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவர் சரோஜா சிறிசேன, அந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் லஸ்ஸினா சேர்போவிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றதாக தூதுவர் சரோஜா சிறிசேன எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிய கடிதம் ஒன்றையும் தூதுவர் சரோஜா சிறிசேன இதன்போது கையளித்தார்.

மேலும் இச்சந்திப்பின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கலாநிதி லஸ்ஸினா சேர்போவுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றிய குறித்த அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், உறுப்பு நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்துவருகின்ற நாடுகளில் அதன் தாக்கம் என்பன குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor