தற்கொலைக்கு முதல் எடுத்து கொண்ட செல்பி

கர்நாடக மாநிலத்தில் தாய்- மகள் இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா (38) மற்றும் அவருடைய மகள் சௌமியா (19) இருவரும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, கபிலா ஆற்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற பொலிஸார் தற்கொலை செய்துகொண்ட இருவரும் மஞ்சுளா மற்றும் அவருடைய மகள் என்பதை அடையாளம் கண்டனர்.

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இருவரும் தற்கொ லைக்கு முன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya