மூட நம்பிக்கையால் சிறுமியை சீரழித்த மந்திரவாதி

கேரளாவில் சிறுமிக்கு சூனியம் எடுப்பதாக கூறி நடுக்காட்டிற்கு அழைத்து சென்று பா லியல் தொ ல்லை கொடுத்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகளுக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி தலைவலி வருவது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

தந்தை கூலித் தொழிலாளி என்பதால், பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. தலைவலிக்கு வேறு எதுவும் காரணம் இருக்குமோ என்று பயந்த அவர், அந்த ஊரில் மந்திரவாதி, பில்லி, சூனியம் எடுப்பவர் என்று கூறப்படும் ரூபேஷ்(35) என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவரின் நோய் குறித்து கேட்டறிந்த ரூபேஷ், அவரிடம் சிறுமிக்கு சூனியம் இருப்பதாகவும், அதை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மகளை ரூபேஷிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரூபேஷ், சிறுமியை பார்த்தவுடன், தனி இடத்தில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு யாருமில்லாத இடத்தில் சிறுமிக்கு பா லியல் தொ ல்லை தர சிறுமி அலறி க த்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காட்டுப்பகுதிக்கு ஓடிச் சென்று, ரூபேஷை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சிறுமிக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததை ரூபேஷ் ஒப்புக் கொண்டதை அடுத்து போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


Recommended For You

About the Author: Ananya